Breaking News

யாழ்ப்பாணக் கல்லூரியின் பெற்றோர் சங்கத்துக்கு முன்னாள் பேராயர் ஆலோசகர்

யாழ்ப்பாணக் கல்லூரிப் பெற்றோர் சங்கத்தின் நான்காவது கூட்டத்தில் கல்லூரியின் முன்னாள் அதிபரான முன்னாள் பேராயர் ஜெபநேசன் சங்கத்தின் ஆலோசகராகக் கலந்துக்கொண்டு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்தார்.

கடந்த ஜனவரி 21ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரியின் பெற்றோர் சங்கத்தின் நான்காவது கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை  வட்டுக்கோட்டை மூன்றாம் பனை ஐக்கிய நாணய சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.

சங்கத்தினது யாப்பு கடந்த மூன்றாவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய கலாநிதி சொலமனிடம் சங்கத்தின் தலைவர் சரவணபவன் மயூரன் மற்றும் செயலாளர் கலாநிதி பகீரதி ராசனன் ஆகியோரினால் கல்லூரியில் வைத்துக் கையளிக்கப்பட்டது.

அதேவேளை யாப்பின் பிரதி ஒன்று கல்லூரி ஆளுநர் சபை தலைவரும், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயருமான‌ அதி வண. டானியல் தியாகராஜாவுக்கு பதிவுத்தபால் மூலமும் அனுப்பட்டது.

இந்நிலையிலே சங்கத்தின் நான்காவது கூட்டம் நேற்று மாலை 4.30 மணியளவில் மூன்றாம் பனை ஐக்கிய நாணய சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலே கல்லூரியின் முன்னாள் அதிபரும், தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயருமான அதி வணக்கத்துக்குரிய கலாநிதி சுப்பிரமணியம் ஜெபநேசன் ஆலோசகராகக் கலந்து சிறப்பித்தார்.

கூட்டத்திலே பேசிய அதி வணக்கத்துக்குரிய கலாநிதி ஜெபநேசன், யாழ்ப்பாணக் கல்லூரியின் பெற்றோர் சங்கம் மென்மேலும் பலம் பெறும் வகையில் பல சிறப்பான ஆலோசனைகளை முன்வைத்தார். அவரின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு பெற்றோர் சங்கம் தனது எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாக பெற்றோர் சங்கத்தின் தலைவர்  சரவணபவன் மயூரன் முதல்வனுக்குத் தெரிவித்தார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!