கார்களின் விலை எகிறுகிறது – பட்ஜெட்டில் வரி அதிகரிகப்பால் மாற்றம்

0

2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வாகன இறக்குமதி மீதான வரி உயர்வால் வகூன் ஆர் (wagon R) கார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாலும் அல்ரோ (Alto) ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாலும் அக்ஸிகோ மற்றும் அக்குவா (Axico and Aqua) 6 லட்சம் ரூபாவலும் பிறிமுயோ மற்றும் சிஎச்ஆர் (primio and CHR) 7 லட்சம் ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பஅதிசொகுசு வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு நாளை புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே வாகன இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்பட்டது.

800 சிலின்டர் வலுவுக்கும் குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான உற்பத்தி வரி  ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவினாலும் 1,000 சிலின்டர் வலுவுக்கும் குறைந்த பெற்றோர் வாகனங்களுக்கான உற்பத்தி வரி ஒரு லட்ச்சத்து 75 ஆயிரம் ரூபாவினாலும் 1,300 சிலின்டர் வலுவுக்கும் உள்பட்ட பெற்றோர் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 5 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.

800 சிலின்டர் வலுவுக்கும் குறைந்த கலப்பு (ஹைபிரிட்) வாகனங்களுக்கான உற்பத்தி வரி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. 1000 சிலின்டர் வலுவுக்கும் உள்பட்ட ஹைபிரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 5 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

கிலோ வோட் 70 மின்சார மோட்டார் வாகனத்தின் மீதான உற்பத்தி வரி ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இதேபோன்று 200 சிலின்டர் வலுவைக் கொண்ட முச்சக்கர வாகன மீதான உற்பத்தி வரி 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுகிறது.

நாளையிலிருந்து அதி சொகுசு வாகன இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வைப்பு நீக்கம் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here