கோலி சதமடித்தும் இந்திய அணி ஆஸியிடம் வீழ்ந்தது

ஆஸ்திரேலியாவுடனான 3ஆவது ஒருநாள் போட்டியில் கோலி சதமடித்தும் இந்திய அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களைக் குவித்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் கவாயா 104 ஓட்டங்களையும் அணித்தலைவர் பின்ஷ் 93 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக 31.5 ஓவர்களில் 193 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு 314 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தவான் 1, ரோகித் 14, ராயுடு 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து மோசமான ஆரம்பத்தை அளித்தனர். அதன்பிறகு, கோலியுடன் இணைந்து அணியை ஓரளவுக்கு சரிவில் இருந்து மீட்டார் தோனி. அவர் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சம்பா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, கோலியுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணியில் கோலி பெரும்பாலான ஸ்டிரைக்கை எடுத்து துரிதமாக ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு தேவையான  ஓட்டசராசரியை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். இந்த ஜோடி நல்ல நிலையில் விளையாடி வந்தபோது ஜாதவ் 26 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், விராட் கோலி மீண்டும் விஜய் சங்கருடன் இணைந்து மீண்டும் இலக்கை நோக்கி துரிதமாக ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவர் 41ஆவது சதத்தை பதிவு செய்தார்.

இதையடுத்து, 38-ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 பந்துகளில் பவுண்டரி அடித்த கோலி 3-ஆவது பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். அவர் 95 பந்துகளில் 16 பவுண்டரி, 1 சிக்ஸர் உள கட 123 ஓட்டங்கள் எடுத்தார்.

அதன்பிறகு பொறுப்பை ஏற்று சற்று அதிரடியை வெளிப்படுத்திய சங்கரும் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, துரிதமாக ஓட்டங்களைக் குவிக்க திணறி வந்த ஜடேஜா 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனால், இந்திய அணி 48.2 ஓவர்கள் முடிவில் 281 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற நிலையில் உள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!