மகளிர் தினத்தில் ஜனாதிபதி சட்டவாளர் சாந்தா அபிமன்னசிங்கம் மதிப்பளிப்பு

சட்டத்துறையில் 45 ஆண்டுகள் சாதித்தமை மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மதிப்புப்பெற்ற தமிழ் பெண் சட்டவாளர் என்பவற்றுக்காக சாந்தா அபிமன்னசிங்கம், மகளிர் தினமான இன்று சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தரால் கௌரவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி சட்டவாளர் சாந்தா அபிமன்னசிங்கத்துக்கு மல்லாகம் பதில் நீதிவான் திருமதி சிவபாதம் பொன்னாடை அணிவித்து கௌரவமளித்தார்.

மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது. மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் இந்த மகளிர் தின நிகழ்வை நடத்தினர்.

இதன்போது யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவியான ஜனாதிபதி சட்டவாளர் சாந்த அபிமன்னசிங்கம் மதிப்பளிக்கப்பட்டார். சட்டத்துறையில் 45 ஆண்டுகள் பணியாற்றி பிரபல சட்டத்தரணிகள் பலரை உருவாக்கியமைக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி என்ற கௌரவத்தைப் பெற்ற தமிழ் பெண் சட்டவாளர் என்பவற்றுக்காக இன்றைய மகளிர் தினத்தில் அவர் மதிப்பளிக்கப்பட்டார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!