கிளிநொச்சி மாணவிகள் இருவர் றோல் போல் போட்டியில் சாதித்தனர்

கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த மாணவிகள் இருவர் இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண
றோல் போல் போட்டியில் விளையாடி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

உருத்திரபுரத்தை சேர்ந்த தினகராசா சோபிகா, நடராசா வினுசா ஆகிய இருவரும் தேசிய றோல் போல் அணியில் விளையாடி சாதித்துள்ளனர். ஆசியக் கிண்ண றோல் போல் போட்டிகள் பெப்ரவரி 21ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதிவரை இந்தியாவில் இடம்பெற்றன. அதில் இலங்கை அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் விளையாடிய உருத்திரபுரத்தை சேர்ந்த தினகராசா சோபிகா, நடராசா வினுசா மாணவிகள் இருவரும் சாதனை புரிந்தனர்.

மாணவி நடராசா வினுசா சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர்.

இவர்களையும் இவர்களை பயிற்றுவித்த கிளிநொச்சியை சேர்ந்த விக்ரர் சுவாம்பிள்ளை என்பவருக்கும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!