Breaking News

அரச அலுவலகங்களில் வெற்றிலை, பீடா நுகர்வதற்குத் தடை – அமைச்சரவை ஒப்புதல்

அரச அலுவலகங்களில் வெற்றிலை, பீடா நுகர்வத மற்றும் விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, பீடா, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும் அரசு தடை விதிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் அமைச்சரவையில் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

புற்று நோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!