மண்கவ்வியது இந்தியா: தொடரை வென்றது ஆஸி.

இந்திய அணியை 5ஆவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி தொடரை 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியிடம் ரி20 மற்றும் ஒருநாள் தொடர்களையிழந்த்து கோலி படை.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடைபெற்ற ரி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

இந்தியாவில் நடைபெறும் தொடரில் ஆஸ்திரேலியா ரி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அடுத்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று 2-2 எனத் தொடரைச் சமநிலை செய்த்து.

இந்தலையில், தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தலைநகர் புதுடில்லி மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷமி மற்றும் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டனர். ராகுல் மற்றும் சஹால் நீக்கப்பட்டனர்.

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணியின் தலைவர் பின்ச் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா மற்றும் ஆரோன் பின்ச் தொடக்கம் கொடுத்தனர். கவாஜா ஒருபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, 15-வது ஓவரில், ஜடேஜாவின் பந்தில் போல்டாகி பின்ச் 27 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய பீற்றர் ஹென்ஸ்கம், கவாஜாவுக்கு ஓரளவு கைகொடுத்து ஆடினார். இருவரும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 32ஆவது ஓவரில் 174 ஓட்மங்கள் வரை எடுத்துச் சென்றனர்.

இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். கவாஜா 100 ஓட்டங்களை எடுத்து அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார்.  கவாஜாவின் அதிரடிக்கு முற்றிப்புள்ளி வைத்தது புவனேஸ்குமாரின் பந்துவீச்சு. விராட் கோலியிடம்  பிடி கொடுத்து வெளியேறினார் அவர். பின்னர் களமிறங்கிய மக்ஸ்வெல் பெரிதாக ஓட்டம் எதுவும் சேர்க்கமால் நடையைக் கட்டினார்.

அடுத்து ஹென்ஸ்கம் வெளியேற, 37 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 188 ஓட்டங்களைச் சேர்த்து ஆஸ்திரேலியா தடுமாறியது.

4ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த டியூனர் 20 ஓட்டங்களிலும் மார்கஸ் 20 ஓட்டங்களிலும் அலெக்ஸ் கேரி 3 ஓட்டங்களையும் எடுத்து  வெளியேறினர்.

இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலியா அணி சீட்டுக்கட்டாக சரியத்தொடங்கியது. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை குவித்தது ஆஸ்திரேலியா.

இந்திய அணி தரப்பில் புவனேஸ்குமார் 3 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 273 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே தவான் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

அடுத்து வந்த இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கோலி, ரோகித்துடன் இணைந்து சற்று ஆறுதலளித்தார். எனினும் விராட் கோலி  20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பான்ட் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணி 91 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையிழந்த்து.

சம்பா சுழல் ஜாலம்

ஒருமுனையில் ரோகித் சிறப்பாக ஆடினார். அவருக்கு சிறந்த ஜோடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் 16 ஓட்டங்களுடன் சம்பாவின் ஆட்டமிழந்து நடையக்கட்டினார்.

அடுத்து சம்பாவின் பந்தை இறங்கி வந்து அடிக்க ரோகித் முயற்சித்தார். ஆனால், பந்தை அடிக்க துடுப்பு சுழற்றியபோது, கையைவிட்டு நழுவிச்சென்ற துடுப்பு அந்தரத்தில் பறந்து தூரத்தில் விழுந்தது.

உடனே கிரீஸ்-க்கு வருவதற்குள் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் செய்தார். இதனால், ரோகித் சர்மா 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினார்.

அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவை ஓட்டமெதனையும் பெறாமலும் அடுத்தடுத்து வெளியேற்றினார் சம்பா. அதனால் இந்திய அணி 28.5 ஓவர்களில் 132 ஓட்டங்களை மாத்திரமெடுத்து 6 விக்கெட்டுக்களையிழந்து தடுமாறியது.

7ஆவது விக்கெட்டுக்காக இணைந்த கேதார் ஜாதவ் – புவனேஷ்வரகுமார் ஜோடி நிதானமாக ஆடி விக்கெட் சரிவைத் தடுத்தனர். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி சற்று அதிரடி காட்ட இந்திய அணி 200 ஓட்டங்களை எட்டியது.

இந்த ஜோடி 7ஆவது விக்கெட்டுக்காக 91 ஓட்டங்களைச் சேர்த்த போது புவனேஸ்வரகுமார் 46 ஓட்டங்களுடனும் கேதார் ஜாதவ் 44 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 46.1 ஓவரில் 223 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களையிழந்த்து.

50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களையிழந்து 237 ஓட்டங்களை மாத்திரமெடுத்து 35 ஓட்டங்களால் தோல்வியடைந்த்து.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!