கிளிநொச்சி விளையாட்டு கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தார் தர்ஜினி சிவலிங்கம்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண  விளையாட்டுத்தொகுதிகள் கட்டடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி திறந்து வைத்தார்.

வடக்கு மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியை  வீர, வீராங்கனைகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பி.ப 3 மணிக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் ஆரம்பமானது.

விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து வடமாகாண விளையாட்டுத்தொகுதிகள் கட்டடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி திறந்து வைத்தார். தொடர்ந்து  கட்டடத்தொகுதியில் உள்ள நீர்ச்சல் தடாகத்தை அமைச்சர் திறந்து வைததார்.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,  விளையாட்டு அமைச்சு உத்தியோகத்தர்கள் ,விளையாட்டு வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!