மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரியின் நடவடிக்கைகளால் மக்கள் விசனம்

யாழ்ப்பாணம் தீவகம் மண்டைதீவு பொலிஸ் காவலரணுக்கு பொறுப்பாக உள்ள தமிழ் பொலிஸ் அலுவலகரின் நடவடிக்கைகள் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் கடும் அதிருப்தியும் விசனம் கொண்டுள்ளனர்.

உப பொலிஸ் பொலிஸ் பரிசோதகரான அவர், கால்நடைகள் கடத்தல்களுக்கு துணை நிற்பதுடன், அவரது நடத்தைகளும் தவறாக உள்ளது என மண்டைதீவு மக்கள்  குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அண்மைக்காலமாக மண்டைதீவு உள்பட அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளிலிருந்து கால்நடைகளைக் கடத்திச் செல்லும் இறைச்சிக் கடை வியாபாரிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழ் பொலிஸ் அலுவலகர் துணை நிற்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆதரவும் வழிகாட்டல்களும் உள்ளன என்று மண்டைதீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்டைதீவு பொலிஸ் காவலரன் பொறுப்பாளரின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதுதொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் பேசி விரைவான நடவடிக்கையை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

எனினும் பொலிஸ் அலுவலகர் மீது விரைவான நடவடிக்கை தேவை என மண்டைதீவு மக்கள் கேட்டுள்ளனர்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!