மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் இறுதி முடிவு வெள்ளியன்று

0
படம், செய்திமூலம்: சண்டே ரைம்ஸ்

மன்னார் நகர நுழைவாயிலில், சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பாக, வரும் மார்ச் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை, தடயவியல் விசாரணையாளர்களும், காணாமற்போனோர் பணியகத்தின் பிரதிநிதிகளும் மன்னார் நீதிவானைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதன்போது, மன்னார் புதைகுழி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

றேடியோ கார்பன் அறிக்கை, மன்னார் புதைகுழி விடயத்தில், இறுதியானதாக இருக்காது. பார் – கோட் பரிசோதனை உள்ளிட்ட ஏனைய ஆய்வு அறிக்கைகளும், இறுதி முடிவு எடுக்கப்படும் போது, கருத்தில் கொள்ளப்படும்” என்றும் சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.