மகேல – சங்காவின் ரெஸ்டோரன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்தது

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் மகேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார இருவரும் இணைந்து நடத்தும் மினிஸ்ரி ஒப் கிராப் (Ministry of Crab) ரெஸ்ரோடன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆசியாவின் சிறந்த 50 ரெஸ்ரோடன்ட்கள் தரப்படுத்தலில் 35ஆவது இடத்தை கொழும்பில் இயங்கும் மினிஸ்ரி ஒப் கிராப் பிடித்துள்ளது.

இந்த ரெஸ்ரோடன்டை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜான்பவான்கள் மகேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

மக்காவுவில் இன்று இரவு நடைபெற்ற விழாவில் 35ஆவது இடத்தைப் பிடித்த மினிஸ்ரி ஒப் கிராப் ரெஸ்ரோடன்ட்டுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 

இந்த ரெஸ்ரோடன்டின் சிறப்பாக நண்டு மற்றும் றால்  கடலுணவுகளை பலதரப்பட்ட சுவைகளில் வழங்குவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.