திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

சிறிலங்கா கிரிக்கெட்டின் டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட கொழும்பு போக்குவரத்து நீதிமன்ற நீதிவான், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த கட்டளையிட்டார்.

கொழும்பு பொரளையில் நேற்று அதிகாலையில் காரில் பயணித்த திமுத் கருணாரத்ன, முச்சக்கர வண்டி ஒன்றை மோதி விபத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அத்துடன் விபத்தை ஏற்படுத்திய போது அவர் மதுபோதையில் இருந்தார் என்ற குற்றச்சாட்டையும் பொலிஸார் முன்வைத்தனர்.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட திமுத் கருணாரத்ன, இன்று கொழும்பு போக்குவரத்து நீதிமன்ற நீதிவான் சாளிய சன்ன அபயவர்த்த முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

முச்சக்கர வண்டியின் சேதத்தை முழுமையாக சீரமைத்து வழங்குவதாக திமுத் கருணாரத்ன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார். அத்துடன், பாதிக்கப்பட்டவர் கோரும் இழப்பீட்டை வழங்கவும் குற்றஞ்சாட்டப்பட்டவர் தயார் என சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

எனினும் திமுத் கருணாரத்ன மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை பொலிஸார் தாக்கல் செய்யாததால், வழக்கை வரும் மே 2ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதிவான், திமுத் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும் அவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி வைக்கவும் மன்று உத்தரவிட்டது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!