திமுத் கருணாரத்னவுக்கு 1.3 மில்லியன் ரூபா தண்டம் – சிறிலங்கா கிரிக்கெட் விதிப்பு

வீரர்களின் நடத்தை விதிமுறைகளை மீறி மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்துக்கு இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவை 7 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் ( சுமார் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபா) தண்டம் செலுத்துமாறு சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பயணித்த கார், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை    பொரளை கிங்ஸி வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றை  மோதியதில் விபத்து இடம்பெற்றது. விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொரளை பொலிஸார் மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் திமுத் கருணாரட்னவை கைது செய்தனர். மறுநாள் கொழும்பு போக்குவரத்து நீதிமன்றில் முன்னிலையான அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

அத்துடன், நீதிமன்ற வழக்கு மே 2ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீரர்களின் நடத்தை ஒழுங்கு விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் திமுத் கருணாரத்னவை உள்ளக விசாரணைக்குட்படுத்தியது சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம். அதில் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட திமுத் கருணாரத்னவை 7 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமாகச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!