பொன் அணிகள் சமரின் ஒருநாள் போட்டி வியாழனன்று கோலாகலம்

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க “பொன் அணிகள் போர்” கிரிக்கெட் சமரின் ஒரு அங்கமான ராஜன் – கதிர்காமர் வெற்றிக்க ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் வியாழக்கிழமை (11) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் 4 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் ராஜன் – கதிகாமர் வெற்றிக்கிண்ணத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் போட்டியை  நடத்த கல்லூரிகளின் நிர்வாகமும் பழைய மாணவர் சங்கங்களும் இணைந்து தீர்மானித்தன.

யாழ்ப்பாணக் கல்லூரி அணி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையே 97 ஆண்டுகளாக பொன் அணிகள் போர் கிரிகெட் தொடர் இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பொன் அணிகள் போரில் இன்னிங்ஸ் போட்டியை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அதன் ஒரு அங்கமான ராஜன் – கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

சம்பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் ஆடை அறிமுகம்

இதேவேளை, யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஆடையை (Cricket Jersey) கல்லூரியுன் 2004ஆம் ஆண்டு உயர் தரப்பிரிவு மாணவர்கள் (JC 04) வழங்கிவைத்தனர்.

அத்துடன், 2004 உயர் தரப்பிரிவு மாணவர்கள், வழமைபோன்று இம்முறையும் கிரிக்கெட் பருவகாலத்தில் சாதித்த வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசிலை வழங்கிவைத்திருந்தனர்.

சிறந்த வீரர்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் கிரிக்கெட் ஆடை வழங்கிவைக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதலாம் தவணை இறுதிக் கூட்டத்தின் போது இடம்பெற்றது. யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவரும் JC 04 தலைவருமான ஜெபரட்ணம் ஜெரிம் நிரோஷன் பங்கேற்று கிரிக்கெட் அணிக்கான ஆடையை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அத்துடன், யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலர் இம்முறை கல்லூரி அணிக்கான கிரிக்கெட் உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!