நாய்களின் காப்பகத்தைக் கூட அமைக்கத் திறனற்றவர்கள் சமஷ்டி கேட்கிறார் – விக்னேஸ்வரன் மீது தவராசா சாடல்


“முழுக்க முழுக்க மாகாண சபையினதும் உள்ளூராட்சி சபைகளினதும் அதிகார வரம்பிற்கு உள்ட்ட கட்டாக்காலி நாய்கள் காப்பகத்தை அமைக்கும் சிறு வேலைத்திட்டங்களை கூட செய்ய திறனற்றவர்களாக மாகாண சபையில் இருந்துவிட்டு எமது பிரதேசத்திற்குக் கூடிய அதிகாரங்கள் வேண்டும் என்றும் சமஷ்டி அதிகாரங்கள் வேண்டும் என்றும் கோருவது நகைப்புக்குரியது”

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

சிவபூமி அறக்கட்டளையால் இயக்கச்சியில் அமைக்கப்பட்டுள்ள நாய்கள் சரணாலயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சி.தவராசா மேலும் தெரிவித்துள்ளதாவது:

வடக்கு மாகாண சபையினால் 5 வருடங்களாக செய்ய முடியாதிருந்த காரியத்தினை சிவபூமி அறக்கட்டளை நிலையம், கலாநிதி ஆறு. திருமுருகனின் வழிகாட்டலில் நிறைவேற்றியிருக்கின்றது.

வடக்கின் முன்னாள் முதலமைச்சர், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற முறையில் கட்டாக்காலி நாய்கள் தொடர்பான பிரச்சினைக்கு உள்ளூராட்சி ஆணையாளர், செயலாளர்களை அழைத்து பல கூட்டங்களை நடத்தியதுதான் 5 வருடங்களாக அவர் சாதித்த சாதனையாக உள்ளது.

சிவபூமி அறக்கட்டளை நிலையத்தினால் இதனை சாதிக்க முடியும் என்றால் ஏன் உள்ளூராட்சி மன்றங்களை நெறிப்படுத்தக் கூடிய நிலையில் அன்றிருந்த முதலமைச்சரினால் சகல உள்ளூராட்சி சபைகளையும் உள்ளடக்கி அவர்களை நெறிப்படுத்தி மாகாண சபையின் அனுசரணையுடன் இவ்வாறான ஒரு திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது போனது.

இது முழுக்க முழுக்க மாகாண சபையினதும் உள்ளூராட்சி சபைகளினதும் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு விடயம்.
இவ்வாறான சிறு வேலைத்திட்டங்களை கூட செய்ய திறனற்றவர்களாக மாகாண சபையில் இருந்துவிட்டு எமது பிரதேசத்திற்குக் கூடிய அதிகாரங்கள் வேண்டும் என்றும் சமஷ்டி அதிகாரங்கள் வேண்டும் என்றும் பேசிக்கொண்டிருப்பதில் பலனேதும் இல்லை.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக கனவு காண்கின்றனர். 

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை கலாநிதி ஆறு திருமுருகன் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். தனி மனிதனாக நின்று பல மக்கள் நலன்சார் செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடத்திவரும் கலாநிதி ஆறு திருமுருகனின் நாய்கள் காப்பகம் திட்டமும் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துக்றேன்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!