ஜனாதிபதியின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சுமந்திரன், டக்ளஸ் பங்கேற்பு


ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவி அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்து இலங்கையர்களுடனும் இணைந்து தேசிய பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  இன்று (14) கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றுவதில் இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேன அம்மையார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றினர்.

பணிகளை ஆரம்பிக்கும் பாரம்பரியத்தின் படி ஜனாதிபதி  தனது உத்தியோகபூர்வ வளாகத்தில் மரக்கன்றொன்றை நாட்டினார். அதனைத்தொடர்ந்து கை விசேட பாரம்பரியத்திலும் இணைந்து கொண்டார்.

மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைதந்திருந்ததுடன், அவர்கள் அனைவரையும் சுமூகமாக வரவேற்ற ஜனாதிபதி, உணவு உட்கொள்ளும் சுபநேரத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு விருந்துபசாரங்களையும் வழங்கினார்.

மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டிற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கேற்ப மரம் நடும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் நாளைய தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முக்கொத்து சுபநேரமான மு.ப 11.17க்கு வெள்ளை நிற ஆடைகளில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றினை நடுவது சிறந்ததாகும்.

இந்த சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் குடிமக்கள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி  அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார் – என்றுள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நுவரேலியாவில் புதுவருடத்தை பால்காச்சி வரவேற்றார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் தனது இல்லத்தில் புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!