அதிகாரிகளின் தடைகளை உடைத்து கரந்தாய் மக்கள் மீள்குடியமர்வு

கிளிநொச்சி- பளை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் 21 தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமான காணியை தென்னை பயிா்ச்செய்கை சபை ஆக்கிரமித்திருந்த நிலையில், காணிகளை கேட்டு போராடிவந்த மக்கள் பொறுமையின் எல்லை மீறி இன்று காலை தமது காணிகளுக்குள் நுழைந்து அங்கு தற்காலிக கொட்டகைகளை அமைத்து மீள்குடியேறியிருக்கின்றனா்.

இன்று காலை 6 மணியளவில் மக்கள் தமது காணிகளுக்குள் நுழைந்த நிலையில், பளை பிரதேச பொலிஸாரும், தென்னை பயிா்ச்செய்கை சபையினரும் மக்களை தடுக்க முயன்றபோதும் மக்கள் தமது  காணிகளுக்குள் நுழைந்தனா்.

நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் சம்பவ இடத்திற்கு உடனடியாகவே சென்று மக்களுக்கு ஆதரவு தொிவித்தார். சம்பவ இடத்தில் நின்றிருந்த பொலிஸாருக்கும், தென்னை பயிா்ச்செய்கை சபையினருக்கும் அவர் அறிவுறுத்தினாா். இதனையடுத்து மக்கள் தமது காணிகளை துப்புரவு செய்து தற்காலிக கொட்டகைகளை உடனடியாகவே அமைத்து மீள்குடியமர்ந்தனா்.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனும், காணி உாிமையாளா்களான மக்களும் கருத்து தொிவிக்கையில்,

1976ம் ஆண்டு காணி கச்சோி நடாத்தப்பட்டு 21 குடும்பங்களுக்கு 90 ஏக்கா் காணி வழங்கப்பட்டது. இந்த காணிகளில் மக்கள் மிக நீண்டகாலம் வாழ்ந்த நிலையில், போருக்கு பின்னா் 2010ம், 2011ம் ஆண்டுகளில் தென்னை பயிா்ச்செய்கை சபையினா் அடாத்தாக மக்களை அவா்களுடைய காணிகளிலிருந்து வெளியேற்றினா்.

இதன் பின்னா் பல தடவைகள் காணிகளை கேட்டும் மக்களுக்கு காணிகள் வழங்கப்படாத நிலையில், நாடாளுமன்றத்திலும் இந்த விடயம் சிறப்பு விடயமாக எடுக்கப்பட்டு பேசப்பட்டபோதும் நிவாரணம் கிடைக்காத நிலையில், மனித உாிமைகள் ஆணைக்குழுவிற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி மனித உாிமை ஆணைக்குழு மக்களிடம் உள்ள ஆதாரங்கள் மற்றும் இருபக்க நியாயங்களையும் சீா்துாக்கி பாா்த்து 1976ம் ஆண்டு அரசால் 21 பேருக்கு வழங்கப்பட்ட காணி எனவும், அந்த காணியில் 21 குடும்பங்களை சோ்ந்த மக்கள் மீள குடியேறுவதற்கு முழு உாித்துடையவா்கள் எனவும் பாிந்துரை செய்துள்ளது.

பளை பிரதேச செயலா், பிரதி பொது முகாமையாளா் தென்னை பயிா்செய்கை சபை, காணி சீா்திருத்த ஆணைக்குழு ஆகியோா் உள்ளடங்கலாக சிலருக்கு தமது பாிந்துரையை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டிருருந்ததுடன், அது தொடா்பாக 2 வாரங்களுக்குள் சாியான பதிலை வழங்குமாறும் கேட்டிருந்தது. ஆனால் அந்த மக்களுக்கு இன்றளவும் பதில் வழங்கப்படவில்லை.

இதனால் மக்கள் தமது காணிகளுக்குள் நுழையவேண்டிய நிலை உருவானது என மக்களும், நாடாளுமன்ற உறுப்பினரும் சுட்டிக்காட்டினா்.

இதனையடுத்து மக்களிடம் ஆதாரங்கள் உள்ளதானால் தாம் அந்த விடயத்தில் தலையிடமாட்டோம் எனப் பொலிஸாா் கூறியதுடன், அடாத்தாக அரச காணிக்குள் நுழைகிறாா்கள் என கூறியதாலேயே தாம் அங்கு வந்ததாக கூறி பின்வாங்கினா்.

இந்நிலையில் மக்கள் தமது காணிகளை துப்புரவு செய்து உடனடியாகவே மீள்குடியமர்ந்தனா்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!