சமுர்த்தி வங்கி அரச வங்கியுடன் இணைக்கப்படும்- அமைச்சர் தயா கமகே எச்சரிக்கை

சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களின் பணிப் புறக்கணிப்பால் மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படுமாயின் அனைத்து சமுர்த்தி வங்கிகளையும் அரச வங்கிகளுடன் இணைத்துவிடுவதே சரியான நடவடிக்கையாக அமையும் என்று சிறுகைத்தொழில் மற்றும் சமுக உள்கட்டமைப்பு அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உத்தேச அடையாள வேலை நிறுத்தம் மற்றும் புதுவருடப் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டனர்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய   ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதுவரை காலமும் முறையான நியமனக்கடிதங்கள் எதுவும் அற்ற நிலையில் நிர்வாக குழப்பங்களுக்கு உள்ளாகியிருந்த சமுர்த்தி அபிவருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு தீர்வாக பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2019/03 இலக்க சுற்றறிக்கை உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கின்றது எனவும் அதனால் குறித்த சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என கோரியே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் இன்று முதல் எதிர்வரும் 29 ம் திகதிவரை திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் புத்தாண்டு சேமிப்பு வேலைத்திட்டத்தினைப் புறக்கணிக்கவும் உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமூக உள்கட்டமைப்பு மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் தயா கமகே,

“சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால் சமுர்த்தி வங்கிகளின் சேவையைப் பெறுவதில் மக்களுக்குப. பாதிப்பு ஏற்பட்டால், அனைத்து சமுர்த்தி வங்கிகளையும் இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கியுடன் இணைத்துவிடுவதே சரியான நடவடிக்கையாக அமையும்.

சிக்கல்கள் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிச்சயமாக தீர்வு வழங்கப்படும். அவர்களுக்கு நீதி மறுக்கப்படாது” என்று தெரிவித்தார்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!