ஏஎல்,ஓஎல் பரீட்சை முறைகேடுகளைத் தடுக்க படையினரின் உதவியுடன் புதிய பொறிமுறை

க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளின் போது மாணவர்கள் இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய பொறிமுறை (Geofencing system) நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பொறிமுறை சிறப்பு அதிரடிப் படை (STF) மற்றும் இராணுவத்தினரின் தொழிநுட்ப உதவியுடன் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் அதிதிறன் அலைபேசி (Smart Phone), கணிப்பான் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி விடையளிக்கும் பரீட்சை முறைகேடு தடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பரீட்சை மண்டபத்தில் இந்தப் பொறிமுறையை (Geofencing system) பொருத்திவிட்டால் மாணவர் ஒருவர் இலத்திரனியல் சாதனத்தைப் பயன்படுத்தும் போது இலகுவாகக் கண்டறிய முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!