கடும் வெப்பத்தால் மயங்கிச் சரிந்த குடும்பத்தலைவர் உயிரிழப்பு- முல்லையில் சம்பவம்

ஆடு மேய்க்கச் சென்ற குடும்பத் தலைவர், திடீரென மயமடைந்து சரிந்த நிலையில் உயிரிழந்தார் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கடும் வெப்பநிலை காரணமாக குடும்பத்தலைவர் மயமடைந்து பின்னர் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பபட்டதாகப் பொலிஸார் கூறினர்.

முல்லைத்தீவு பொன்னகர் பகுதியில் இன்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

முல்லைத்தீவு முள்ளியவளை முதலாம் கோயில் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் தயானந்தன் (வயது-51) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலத்தை மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!