மின்னல் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபா ஒரு லட்சத்து 15 ஆயிரம்

உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது.

இன்று காலை 6 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலர் ஜெயக்காந், மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரன், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன், கிராம சேவகர், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் அடங்கிய குழுவினர் மின்னல் இடந்த நிகழ்ந்த சம்பவ இடத்தினை சென்று பார்வையிட்டனர். அத்துடன், உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கும் சென்றனர். 

இதன்போது சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் இறப்பிற்கான கொடுப்பனவு ரூபா 15 ஆயிரம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் கொடுப்பனவு ரூபா ஒரு லட்சம் வழங்க அரச அதிபர் பணித்தார். அதில்  உடனடியாக பதினையாயிரம் ரூபாவினை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரச அதிபர் வழங்கினார். மீதிக் கொடுப்பனவு இறப்புச் சான்றிதழ் கிடைத்ததும் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கான வீட்டுத்திட்டத்தினை முன்னுரிமை அடிப்படையில் வழங்கவுமாறும் அரச அதிபர் பணித்தார்.

அப்பகுதிளில் அடிக்கடி மின்னல் தாக்கம் நிகழ்வதற்கான காரணம் பற்றி ஆராய்வதோடு அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் இயங்கு நிலையில் இருக்கின்றதா மற்றும் உரிய தரத்தில் உரிய முறைப்படி பொருத்தப்பட்டுள்ளதா என உடனடியாக பரிசீலித்து நடவடிக்கையெடுக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவுக்கு அரச அதிபர் உத்தரவிட்டார்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!