மஹியங்கனை கோர விபத்தில் 10 பேர் சாவு: இருவர் காயம்

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வான் – பேருந்து விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் மஹியங்கனையிலிருந்து பயணித்த வான் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில், வானில் பயணித்த 12 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.

உயிரிழந்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மேலும் இரண்டு பெண்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்துச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!