உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி வீர்ர்களான தினேஷ் சந்திமல், நிரோஷன் டிக்வெல, தனுஷ்க குணதிலக, உபுல் தரங்க ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் – 2019 எதிர்வரும் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன நேற்று நியமிக்கப்படார். அவரது முதலாவது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இதுவாகும்.

இந்த நிலையில் இலங்கை அணி இன்று நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம் வருமாறு:

திமுத் கருணாரத்ன (அணித் தலைவர்) லசித் மலிங்க, அஞ்சலோ மத்யூஸ், திசார பெரேரா, குசல் ஜெனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ், இசுறு உதான, மிலிந்த சிறிவர்த்தன, அவிஸ்க குணவர்த்தன, ஜீவன் மென்டிஸ், லகிரு திரிமன்ன, வண்டசே, நுவான் பிரதீப் மற்றும் சுரங்க லக்மல்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!