காரை. – காவலூர் பயணிகள் பாதை பழுதால் பொது மக்களுக்கு சிரமம் – உடன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை


காரைநகர் – ஊர்காவற்றுறை  இடையிலான பொது போக்குவரத்துச் சேவை (பாதை) கடந்த 5 நாள்களாக தடைப்பட்டுள்ளதால் அரச ஊழியர்கள், பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

காரைநகர் – ஊர்காவற்றுறையை இணைக்கும் மிதக்கும் இலவச பயண சேவை(பாதை) கடந்த சில தினங்களாக பழுதடைந்துள்ளது.

அவ் மிதக்கும் பயண சேவையினை பயன்படுத்தும் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

[embedyt] https://www.youtube.com/embed?listType=playlist&list=PLj7VvV-r7vs1JhFbn9bUkFW9IBHXQA8Mm[/embedyt]

காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை இடையே பயணிக்கும் பொதுமக்களின் நன்மை கருதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் கடந்த பல வருடங்களாக மிதக்கும் பயண சேவையினை நடாத்தி வருகின்றது.

இந்த நிலையில், தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பிற்கு முதல்நாள், மிதக்கும் பயணசேவையின் இரும்பு கேபிள் இணைப்பு அறுந்துள்ள நிலையில், பயண சேவை அன்றிலிருந்து தடைப்பட்டுள்ளது.

இதனால் எழுவைதீவில் சேவையில் ஈடுபடும் தனியார் படகொன்று வீதி அதிகார சபையினால் தற்காலிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது. எனினும் படகில் போதிய இடவசதியில்லாது காணப்படுவதோடு கட்டணமும் அறவிடப்படுகின்றது.

இதனால் தனியார் படகு சேவையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமங்களுக்குள்ளாகுவதோடு, மோட்டார்
சைக்கிள்களில் காரைநகர், ஊர்காவற்றுறை பகுதிகளில் பணியாற்ற வருகை தரும் பெண் அரச உத்தியோகத்தர்களும்
பெரும் சிரமங்களுக்கு எதிர்நோக்குவதையும் அவதானிக்க முடிகின்றது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறும் இலவச பயண சேவையின் இரும்பு கேபிள்களை உடனடியாக சீர் செய்து தமது போக்குவரத்து நடவடிக்கைகளை இலகபடுத்தி தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!