திருநெல்வேலி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்மன் தேரில் பவனி

0

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய வியாழக்கிழமை நடைபெற்றது. 


கடந்த 5 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று 14ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது. 


காலை 7 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை அடுத்து உள்வீதியுலா வந்த சிவகாம சுந்தரி அம்மன் காலை 8. 30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here