தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு

சிறிலங்கா கிரிக்கெட், உலகக் கோப்பைக்கான தனது அணியை இன்று அறிவித்துள்ள நிலையில் தென்னாபிரிக்காவும் பாகிஸ்தானும்  தமது அணிகளை அறிவித்துள்ளன.

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமீர் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் உலகக் கிண்ணத் தொடருக்கு முந்தைய இங்கிலாந்து தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சர்பிராஸ் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ், ஜுனைத் கான், சோயிப் மலிக் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஹசன் அலி, பகர் ஜமான், பாபர் அசாம், ஜமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

முகமது ஆமீர் கடந்த முறை பாகிஸ்தான் இங்கிலாந்தில் விளையாடிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின்போது ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்தியா இப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய மூவரையும் முகமது ஆமீர் ஆட்டமிழக்கச் செய்தார். 339 ஓட்டங்களை இந்திய அணி துரத்திய போது முதல் ஓவரிலேயே ரோகித் ஷர்மா விக்கெட்டை ஆமீர் வீழ்த்தினார்.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே இந்திய அணியின் அணித்தலைவராக விளையாடிய விராட் கோலியை பெவிலியனுக்கு அனுப்பினார். ஷிகர் தவானையும் 21 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

ஆனால் இப்போட்டிக்கு பிறகு ஆமீர் தான் விளையாடிய 14 ஒருநாள் போட்டிகளில் ஒன்பதில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

பதின்ம வயதுகளில் இருக்கும் மொஹம்மத் ஹஸ்னைன், ஷாஹீன் அப்ரிடியும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஹஸ்னைன் அவரது பந்து வீசும் வேகத்துக்காக தேர்வு செய்யப்பட்டதாக பாகிஸ்தான்  கிரிக்கெட் சபையின் தலைவர் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

ஷோயப் மாலிக்கும், முகமது ஹபீசும் 2007 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விளையாடி வருகிறார்கள்.

மொஹம்மத் அப்பாஸ், மொஹம்மத் நவாஸ், மொஹம்மத் ரிஸ்வான், யாசிர் ஷா ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் விவரம்
சர்பிராஸ் அகமது(வி.கா/ அணித்தலைவர்) , அபிட் அலி, பாபர் அசாம், பாஹீம் அஷ்ரப், பகர் ஜமான், ஹரிஸ் சொஹைல், ஹசன் அலி, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், ஜுனைத் கான், மொஹம்மத் ஹபீஸ், மொஹம்மத் ஹஸ்னைன், ஷதாப் கான், ஷஹீன் ஷா அப்ரிடி, சோயப் மாலிக்.

தென்னாபிரிக்க அணி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்க அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நட்சத்திர வீரர்கள் டிவில்லியர்ஸ், மோர்னே மோர்கல் இல்லாத நிலையில் தற்போது இளம் படையும் மூத்த வீரர்களும் இணைந்த கலவையாக தென்னாபிரிக்க அணி உள்ளது.

காயம் காரணமாக கடந்த 2-3 ஆண்டுகாலமாக அடிக்கடி அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்த ஸ்டெயின் தற்போது உலகக் கிண்ண அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

ஸ்டெயினுக்கு பக்கபலமாக ககிஸோ ரபடா, லுங்கி நிகிடி ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்டில் பெலுக்வாயோ மற்றும் டுவைன் ப்ரீடோரியஸ் அணியில் உள்ளனர். பர்ஹான் பெஹர்தீன் மற்றும் கிறிஸ் மோரிஸுக்கு இடம் கிடைக்கவில்லை.

சுழற்பந்து வீச்சாளர்கள் இம்ரான் தாஹீர் மற்றும் தப்ராஸ் ஷம்சிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொடக்க வீரராக கடந்த ஓராண்டாக தடுமாறி வரும் ஹாஷிம் அம்லாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரீசா ஹென்றிக்ஸ்சுக்கு அணியில் இடம் இல்லை.

விக்கெட் கீப்பராக குயின்டன் டீ கொக் தேர்வு செய்யப்பட்டுளார்.

ஐடன் மர்க்ரம் , ரசி வான் டெர் டசன், அன்ரிச் நொர்ஜே ஆகியிருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஜே பி டுமினி, டேவிட் மில்லர் நடுவரிசை பேட்ஸ்மேன்களாக களமிறங்குவர்.

அணிக்கு ஃபாப் டு பிளசிஸ் தலைமை தாங்குகிறார்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் விவரம்
பாப் டு பிளசிஸ்(அணித்தலைவர்), ஹாஷிம் அம்லா, குயின்டன் டீ கொக், ஜே பி டுமினி, ஐடன் மர்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நொர்ஜே, ஆண்டில் பெலுக்வாயோ, டுவைன் ப்ரீடோரியஸ், ககிஸோ ரபடா, தப்ராஸ் ஷம்சி, டேல் ஸ்டெயின், இம்ரான் தாஹீர், ராசி வான் டெர் டுசென்.

நடப்பு சம்பியனான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 10 நாடுகள் இந்த உலக்க் கிண்ணத் தொடரில் பங்கேற்கின்றன.

2019 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர், வரும் மே மாதம் 30-ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!