உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாமுக்கு அணியாகச் செயற்படல் பயிற்சியை இராணுவத்தினர் வழங்கவுள்ளனர்.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி நாளைமறுதினம் (22) திங்கட்கிழமை மதுறு ஓயா இராணுவ சிறப்புப் படையணி பயிற்சி முகாமில் ஆரம்பமாகவுள்ளது.

இராணுவத்தின் முதல்தர பயிற்றுவிப்பாளர்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் பயிற்சியில் இலங்கை அணியினருக்கு உடல், உள ரீதியான வலிமையை ஊட்டும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை 15 பேர் குழாமில் உள்ளடங்கும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!