தாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்

நாட்டில் 8 இடங்களில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் சந்தேகநபர்கள் பாணந்துறையில் தங்கியிருந்தனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 மணித்தியாலங்களுக்குள் சிறப்பு குழு நியமனம் – ஜனாதிபதி தெரிவிப்பு

இன்று (21) பல உயிர்களை காவுகொண்ட தேசிய துன்பியல் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும் அதன் பின்னணியையும் இவ்வகையான சம்பவங்களுக்கு ஏதுவாக அமைந்த காரணங்களையும் கண்டறிந்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கௌரவ உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட விசேட விசாரணைக் குழுவொன்று எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் நியமிக்கப்படும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அறிவித்துள்ளார்.

உதய ஆர். செனவிரத்ன
ஜனாதிபதியின் செயலாளர்
21.04.2019

பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணை அவசியம்

இன்றைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தும் நடவடிக்கை எடுக்காத்து தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்கள் கண்டனம்

இலங்கையில் இன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு, பெருந்தொகையானோர் காயமடைந்த சம்பவத்தை உலகத் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

றோமில் இன்று நடந்த உயிர்த்த ஞாயிறு ஆராதனையின் போது, இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த பாப்பரசர் பிரான்சிஸ், பாதிக்கப்பட்டவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.

மேலும் கனடா பிரதமர், ஜேர்மனி ஜனாதிபதி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த மோசமான தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.

அவசர அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.  நாட்டின் தற்போதைய நிலமைகள் குறித்து ஆராயவே இந்த அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் கூட்டப்பட்டு நிலமைகள் குறித்து ஆராயப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அவசரகாலச்சட்டம்?

அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

நாளை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை நடத்திய பின்னரே, அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதா என்று முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அணைக்கட்டுக்கு பாதுகாப்பு

தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு உடவளவ – தனமல்வில அணைக்கட்டு வீதி தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!