தராகி சிவராம் நினைவு நாளில் பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டோருக்கு யாழ்.நகரில் அஞ்சலி

பகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி டி. சிவராமின் 14ஆ ஆண்டு நினைவு நாளும் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பொது சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து , நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து ,படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர்கள் , ஊடக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் கொல்லப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!