பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன

0

மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை கட்டாய விடுவிப்பை வழங்கி இந்த பதில் நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வழங்கியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியிருந்தார். எனினும் அவர் பதவி விலக மறுத்ததால் அவருக்கு கட்டாய விடுப்பை வழங்கி ஜனாதிபதி பதில் பொலிஸ் மா அதிபரை நியமித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரை பதிவி நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றுக்கே உள்ளது.

இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here