அட்சய திரிதியையில் தங்கம் வாங்குவது ஏன்?

0

‘அட்சய’ என்பதற்கு அழியாது பெருகக்கூடியது என்பது பொருளாகும். சித்திரை மாதம் அமாவாசையை அடுத்து வரும் திரிதியை நாளை ‘அட்சய திரிதியை’ நாளாக கொண்டாடுகிறோம்.

மனிதர்களின் அறநெறிகளில் ஒன்று தானம். அட்சய திரிதியை நாளில் தான தர்மம் செய்பவர்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். நம்மால் முடிந்த சிறிதளவு தர்மம் செய்தாலும் அதற்கான பலன் பலமடங்காகும். செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் பெருக இந்நாளில் தானம் செய்வது விசேஷம் என்பது நம்பிக்கை.

குறிப்பாக அன்னதானம், சொர்ண தானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசேஷம். தங்கத்தை தானமாகத் தர இயலாதவர்கள் தங்களால் முடிந்த பண உதவியை ஏழைகள், முதியோர்கள், ஆதரவு இல்லாதவர்களுக்குத் தர்மம் செய்வது சிறப்பு.

தானம் மட்டுமின்றி  அட்சய திரிதியை அன்று செய்யும் வழிபாடுகளுக்கும் இரட்டிப்பு பலன்கள் உண்டு. இந்தத் தினத்தன்று மகாலக்ஷ்மி தேவியானவள் குபேரன் இருக்கும் இடத்திற்கு சென்று ஆசி புரிவதாக ஐதீகம். தவிர முழுமுதற் தெய்வமான விநாயகரையும், குபேரனையும் வழிபடுதல் சிறப்பாகும். இவர்களின் அருளால் அஷ்ட ஐஸ்வரியங்களும் நம் இல்லத்தில் பொங்கிப் பெருகும்.

குழந்தைகளுக்கு அன்னப் பிரசன்னம் செய்வது, சங்கீதம், கல்வி, கலைகள் பயில்வது. தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த உகந்த தினம்.

இவற்றைத் தவிர, இந்நாளில் லக்ஷ்மி தேவி குடியிருக்கும் பொருள்களை வாங்குவதும் சிறப்பாகும். லக்ஷ்மி தேவி குடியுள்ள அரிசி, வெல்லம், உப்பு போன்ற பொருள்களை வாங்கலாம்.

பெரும்பாலும் அட்சய திரிதியை நாளன்று மக்கள் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கி மகிழ்வர். ஆபரணங்கள் மீதான பிரியம் காலாகாலத்துக்கும் நம்மைவிட்டு அகலாது.

பலவகை தெரிவுகளையும், டிசைன்ஸ், போன்றவைகளை எதிர்பார்க்கும் நாம், நான்கு தசாப்தங்களாக யாழ்ப்பாணம் நகரில் கஸ்தூரியார் வீதியில் தங்க நகை வியாபாரத்தில் நீங்கா இடம்பிடித்த சிறி நதியா நகை மாளிகை மற்றும் அதன் கிளை நிறுவனமான என்எஸ்ஆர் (NSR) நகை மாளிகைக்குச் சென்று அட்சய திருதியை நாளை பக்திபூர்வமாக அனுசரிக்கலாம்.

குறைந்த விலையில் சிறந்த தங்கநகைகள்!

புது நகை வாங்கும்போதும், பழைய நகைகளை மாற்றம் செய்யும்போதும், நகை மாளிகைகளில் நாம் சந்திக்கும் பிரதான பிரச்சினை அதிகப்படியான செய்கூலி. இதைக் குறைத்து, உற்பத்தி விலையில் உயர்தர சிங்கப்பூர் தங்க நகைகளை  வழங்குகிறது சிறி நதியா நகை மாளிகை.

தங்கத்தின் தரத்தை இலத்திரனியல் முறையில் அளவீடு செய்து சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதனால் நம்பிக்கையளிக்கப்படுகிறது.

நவீன இயந்திரங்களில் நீங்கள் விரும்பிய டிசைன்களை முற்பதிவு செய்தும் பெற்றுக்கொள்ளலாம். மெஷின்களில் தயாரிக்கப்படும் நகைகள் முழுமை பெறுவதில் குறையேதும் இருப்பதில்லை என்பதால் மனநிறைவோடு நகைகளை பெற்றுச்செல்லலாம்.

இந்த அட்சய திரிதியையில் இல்லத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைய  நகைகளை வாங்கிக் கொண்டாடலாம்! மேலும் விவரங்களுக்கு 021 222 2809

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here