அட்சய திருதியை செவ்வாயன்று – பலன்கள் என்ன?

0
31

நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி “அட்சய திருதியை” எனப் போற்றப்படுகிறது.

‘அட்சயம்’ என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல நல்ல பலனை தரக்கூடியது.

இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 24ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (07-05-2019) அன்று வருகிறது.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர்.

அட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்?

• அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும்.

• அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும்.

• அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும். மேலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.

• ஏழைகள், சிறப்புத் தேவையுடையோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தான தர்ம உதவிகள், பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

• புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.

• தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிடைக்கும். தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

• பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

• தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

• மோர், பானகம், குடிதண்ணீர் ஆகியவற்றை தானம் செய்தால் முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

• தன் சக்திக்கு ஏற்ப தானம் செய்யலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

• வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

• தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும், ஏழ்மையையும் மிகக் குறுகிய காலத்தில் தீர்க்கும்.

பெரும்பாலும் அட்சய திரிதியை நாளன்று மக்கள் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கி மகிழ்வர். ஆபரணங்கள் மீதான பிரியம் காலாகாலத்துக்கும் நம்மைவிட்டு அகலாது.

NSR Jewellery

பலவகை தெரிவுகளையும், டிசைன்ஸ், போன்றவைகளை எதிர்பார்க்கும் நாம், நான்கு தசாப்தங்களாக யாழ்ப்பாணம் நகரில் கஸ்தூரியார் வீதியில் தங்க நகை வியாபாரத்தில் நீங்கா இடம்பிடித்த சிறி நதியா நகை மாளிகை மற்றும் அதன் கிளை நிறுவனமான என்எஸ்ஆர் (NSR) நகை மாளிகைக்குச் சென்று அட்சய திருதியை நாளை பக்திபூர்வமாக அனுசரிக்கலாம்.

குறைந்த விலையில் சிறந்த தங்கநகைகள்!

புது நகை வாங்கும்போதும், பழைய நகைகளை மாற்றம் செய்யும்போதும், நகை மாளிகைகளில் நாம் சந்திக்கும் பிரதான பிரச்சினை அதிகப்படியான செய்கூலி. இதைக் குறைத்து, உற்பத்தி விலையில் உயர்தர சிங்கப்பூர் தங்க நகைகளை  வழங்குகின்றன சிறி நதியா நகை மாளிகை மற்றும் NSR நகை மாளிகை.

NSR Jewellery

தங்கத்தின் தரத்தை இலத்திரனியல் முறையில் அளவீடு செய்து சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதனால் நம்பிக்கையளிக்கப்படுகிறது.

நவீன இயந்திரங்களில் நீங்கள் விரும்பிய டிசைன்களை முற்பதிவு செய்தும் பெற்றுக்கொள்ளலாம். மெஷின்களில் தயாரிக்கப்படும் நகைகள் முழுமை பெறுவதில் குறையேதும் இருப்பதில்லை என்பதால் மனநிறைவோடு நகைகளை பெற்றுச்செல்லலாம்.

இந்த அட்சய திரிதியையில் இல்லத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைய  நகைகளை வாங்கிக் கொண்டாடலாம்! மேலும் விவரங்களுக்கு 021 222 2809

NSR Jewellery