குருநகரில் வீடொன்று முற்றுகை: குடு பக்கற்றுகளுடன் இருவர் கைது

0
22

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடொன்றை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்து 11 பக்கற்றுகள் குடு போதைப் பொருளை மீட்டனர். அதனை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“குருநகர், கடற்கரை வீதியில் அண்ணா சிலைக்கு அண்மையாக உள்ள வீடு இன்று மாலை தொடக்கம் இரவு 7.45 மணிவரை சிறப்பு அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனையிடப்பட்டது.

இதன்போதே அங்கு “குடு” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அந்த வீட்டில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக்க் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சிறப்பு அதிரடிப் படையினர் முற்றுகையிட்டனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவர் என்று சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.