அட்சய திருதியை நாளை: வாடிக்கையாளர்களைக் கவர புதிய டிசைன்களில் நகைகள்

0

அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய டிசைனில் நகைகளைத் தயாரிப்பதில் நகை வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால், குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டில் அட்சய திருதியை நாளை செவ்வாய்க்கிழமையாகும்.

இதை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சிறப்புச் சலுகைகளை நகைக் கடைகள் அறிவித்துள்ளன. இதேபோல் பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கென ஆயிரக்கணக்கில் புதிய டிசைனில் நகைகள் தயாரித்தும் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக யாழ்ப்பாணத்தில் நான்கு தசாப்தங்களாக தங்க நகை வியாபாரத்தில் ஈடுபடும் சிறி நதியா நகை மாளிகை உரிமையாளர் நடராஜா சத்தியரூபன் தெரிவித்ததாவது:

தங்கத்தில் முதலீடு செய்வது மக்களின் பாரம்பரியமாக இருக் கிறது. அட்சய திருதியை நாளில் மக்கள் அதிக அளவில் நகை வாங்குவார்கள். எனவே, இந்த ஆண்டும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் நகைகளைத் தயாரித்தும் சிங்கப்பூரிலிருந்தும் தருவித்துள்ளோம்.

ஆயிரத் துக்கும் மேற்பட்ட புதிய வகை டிசைன்களில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளோம்.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பாரம்பரிய மற்றும் லைட் வெயிட் நகைகள், தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பதக்கங்கள், வளையல்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் – என்றார்.

இந்தியாவில் அட்சய திருதியை பழமைவாய்ந்தாக உள்ளபோதும் யாழ்ப்பாணத்தில் இதனைக் கொண்டாடும் வழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்தினோம் என்றும் தொழிலதிபர் நடராஜா சத்தியரூபன் தெரிவித்தார்.

நாளைய தினம் வாடிக்கையாளர்கள் கூடுவார்கள் என்ற காரணத்தினால் இன்றைய தினமே பலர் குடும்பமாக வந்து தமக்குப் பிடித்தமான தெரிவுகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டினர். கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள சிறி நதியா நகை மாளிகையின் இரண்டு காட்சி அறைகள் (கஸ்தூரியார் வீதி இல. 1 மற்றும் இலக்கம் 56) மற்றும் கிளை நிறுவனமான NSR நகை ஜூவல்லரியின் காட்சியறையில் வாடிக்கையாளர்கள் பலர் குடும்பமாக வந்து தமக்குப் பிடித்தமான டிசைன்களை முற்பதிவு செய்தமையை அவதானிக்க முடிந்தது.

யாழ்ப்பாணம் நகரில் நாளைக் காலை 8 மணிக்கே அட்சய திருதியை நகை வியாபாரம் ஆரம்பமாகிறது. இரவு வரை வியாபாரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here