உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டோருக்கு யாழ்.செயலகத்தில் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாடு , அரச கரும மொழிகள் , சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

அதன் போது மாவட்ட செயலக அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் மலரஞ்சலி செலுத்தி , மெழுகுவர்த்தியேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!