சுத்தமான யாழ். மாநகரை உருவாக்குவாரா முதல்வர் ஆனல்ட்

யாழ்ப்பாணம் மாநகரில் கழிவகற்றலில் ஈடுபடும் ஊழவு இயந்திரங்கள் மக்கள் நடமாட்டம் அதிகரித்த வேளையில் நகர வீதிகளில் பயணிப்பதால் பொது மக்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக உழவு இயந்திரங்களிலிருந்து சிந்தும் கழிவு நீர் மற்றும் குப்பைகள் நகரில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதால் பொது மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

சுத்தமான நகரம் என்ற கொள்கைகளுடன் பதவிக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் இந்த விடயத்தில் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களால் கோரிக்கை விடப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாநகர கழிவகற்றல் உழவு இயந்திரம் ஒன்று இன்று (13) திங்கட்கிழமை நண்பகல் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியூடாகப் பயணித்தது. வைத்தியசாலை கழிவு வாய்க்காலில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளுடன் பயணித்த அந்த உழவு இயந்திரத்திலிருந்து நீர் வடிந்தோடியது. அதனால் நகரில் துர்நாற்றம் வீசியது.

மக்கள் நடமாட்டம் அதிகரித்த வேளையில் இந்த உழவு இயந்திரம் பயணத்ததால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

சுத்தமான நகரம் என்ற கொள்கையுடன் யாழ்ப்பாணம் மாநகர ஆட்சிக்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சுகாதாரக் கேடான மாநகரமாக மக்கள் எண்ணும் அளவுக்கு ஆட்சியை நடத்தக்கூடாது என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

எங்கே முதல்வர் ஆனல்ட் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!