இரண்டாம் தவணைப் பரீட்சையை இரத்துச் செய்யும் ஆசிரியர் சங்கத்தின் யோசனையை நிராகரித்தது கல்வி அமைச்சு

இரண்டாம் தவணைக்கான காலம் சில வாரங்களால் குறைவடைந்துள்ளதால் தவணைக்குரிய பரீட்சையை நடத்தவேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கையை கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது.

பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்ததால், அந்த வாரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்ய முடியாமல் போயுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்த ​வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க, இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுகின்றன. மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டாலும், அடுத்த இரு வாரங்களுக்குள் வழமைக்குத் திரும்பும்.

மாணவர்களின் பாதுகாப்புக்காக அனைத்துப் பாடசாலைகளிலும் சிறப்பு பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இதனால் உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளை நம்பாமல் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் கோரப்படுகிறது” என்றும் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்தார்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!