யாழ். ரயில் நிலையத்தில் கைதாகிய வயோதிபப் பெண்ணிடம் மீட்கப்பட்டவை விளையாட்டு உபகரணங்கள் – விசாரணைகளின் பின் அவர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட வயோதிப் பெண், வாய்மூல முறைப்பாடு எடுக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

“வயோதிப் பெண் தனது பேரப் பிள்ளைகளுக்கு என ஜேர்மனியிலிருந்து இலத்திரனியல் விளையாட்டு உபகரணங்களை (Toys) எடுத்துவந்திருந்தார். அவற்றுக்கு றிமோல்ட் உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டிருந்தன. அதனால் சந்தேகமடைந்த பாதுகாப்புப் படையினர், வயோதிப் பெண்ணைக் கைது செய்து ஒப்படைத்தனர்.
\

அவரிடம் மீட்கப்பட்டவை இலத்திரனியல் விளையாட்டு உபகரணங்கள் என்பதை உறுதி செய்யப்பட்டது. அதனால் வயோதிப் பெண் வாய்மூல முறைப்பாடு பெறப்பட்டு விடுவிக்கப்பட்டார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை வந்தடைந்த தொடருந்தில் பயணிகளிடம் பயணப் பைகள் சோதனையிடப்பட்டன. இதன்போது ஜேர்மனி சென்று திரும்பிய மானிப்பாயைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணின் பயணப் பொதியில் இலத்திரனியல் உபகரணங்கள் காணப்பட்டன.

அதனைச் சோதனையிட்ட படையினர், வெடிபொருள்களுக்கு பயண்படுத்தப்படும் உபகரணங்கள் எனச் சந்தேகம் கொண்டு அந்தப் பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் மீட்கப்பட்டவை சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் எனக் கண்டறிந்த பொலிஸார், வயோதிபப் பெண்ணிடம் வாய்மூல முறைப்பாட்டை எடுத்து விடுவித்தனர்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!