77 கிலோ கஞ்சாவுடன் மூவர் கே.கே.எஸ். கடற்பரப்பில் கைது

காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகில் 77 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்த கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவரையும் இன்று மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரும் மன்னாரைச் சேர்ந்த ஒருவரும் என கடற்படையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பு ஊடாக படகில் வடமராட்சி கிழக்கு கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்படுவர் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!