தனது பதவி நீக்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்றார் பேராசிரியர் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னை பதவி நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவு இரத்துச் செய்யும் கட்டளையை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தனது துணைவேந்தர் பதவியை நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தவும் தற்போது தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கந்தசாமியின் நியமனத்தை இடைநிறுத்தி வைக்கவும் இடைக்காலக் கட்டளை ஒன்றை வழங்குமாறு அந்த மனுவில் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் சார்பில் சட்டவாளர் நிறுவனம் ஒன்று இந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை சமர்ப்பித்துள்ளனர்.

மனுவில் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுவை வரும் 22ஆம் புதன்கிழமை 23ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய திகதிகளில் ஒன்றை ஆதரிப்பதற்கு நியமிக்குமாறு மனுதாரரால் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. வின்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்கியிருக்கிறார்.

ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் மே 5ஆம் திகதி அறிவித்திருந்தார். எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கதிகாமநாதன் கந்தசுவாமி உயர் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில் அரச சட்டவாதி ஒருவரை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!