பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியை தள்ளிப்போட்டது அரசு

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றும் முயற்சியை தற்காலிகமாக்க் கைவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இந்தச் சட்ட வரைவை கடந்த ஒக்ரோபர் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்தச் சட்ட வரைவுக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தால், 1979ஆம் ஆண்டின்  48 ஆவது இலக்க, பயங்கரவாத தடைச் சட்டம் காலாவதியாகும்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டியது.

அரசினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தானது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தது.

தமிழ் சட்ட நிபுணர்கள் பலரும் அதே கருத்தையே வெளிப்படுத்தியிருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஜேவிபியும் கருத்துக்களை வெளியிட்டன.

இந்த நிலையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றும் முயற்சியை அரசு தற்காலிகமாக்க் கைவிட்டுள்ளது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!