யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ஆம் திகதி ஆரம்பம் – விடுதி மாணவர்களை 21 வருமாறும் அழைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 22.05.2019 புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன என்று பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.

கலைப்பீடம் (இராமநாதன்நுண்கலைப்பீடம்உட்பட), விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிகபீடம், விவசாயபீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்பபீடம், ஆகியவற்றுடன் சித்தமருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த ஏப்ரல்21ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனையபீடங்கள் னைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.

விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை் முதல் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதிகளின் உள்ளேயும் பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளிலும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் ஒன்றினை எடுத்துவரவேண்டும் என்றும் பதிவாளர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!