குருதியில் தோய்ந்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு  இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

இன்று காலை பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர்.

10ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு  அக வணக்கத்துடன் நினைவஞ்சலி ஆரம்பமாகி 10.32 மணிக்கு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவர் பொது சுடர் ஏற்றினார். 

இதையடுத்து. முள்ளிவாய்க்கால் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுடர்களை, உறவுகளை இழந்தவர்கள் ஏற்றினர்.

உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும்,  கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது ஆற்ற முடியாத் துயரை வெளிப்படுத்தினர்.

படங்கள்: மயூரப்பிரியன்

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!