ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் கல்முனையில் கைது

0

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் இன்று (20) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

அம்பாறை கல்முனையில் வைத்து அவர்கள் மூவரும் இன்று மாலை கைது செய்யப்பட்டனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர,

“ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 89 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

89 பேரில் 69 பேர் குற்றத்தடுப்பு பிரிவினரின் பொறுப்பிலும் 20 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் பொறுப்பிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்”என்று தெரிவித்தார்.