வடக்கில் 81 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

0

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 81 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது.

57 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 15 கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் 9 விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டன.