இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

ஈஸ்டர் தாக்குதல்களில் கொல்லப்பட்டோருக்கு யாழ்ப்பாணத்தில் நினைவஞ்சலி

0
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1157

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திததி உயிர்த்த ஞாயிறு திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மக்களுக்கான சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும் அஞ்சலி நிகழ்வுகளும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகரத்தில் இடம்பெற்றன.


இன்று காலை 8.45 மணிக்கு சாவகச்சேரி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்ட சிறப்பு நினைவஞ்சலி அரங்கில் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சாவகச்சேரி வீரபத்திரர் ஆலய பிரதம குருக்கள், சாவகச்சேரி லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை, சாவகச்சேரி ஜும்மா பள்ளிவாசல் மௌலவி, நாவற்குழி விகாரையின் விகாராதிபதி ஆகியோர் ஒன்றாக மெழுகுவர்த்தி ஏற்றி மலர்அஞ்சலி செலுத்தி சர்வமத பிரார்த்தனைகளை ஆரம்பித்து வைத்தனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

இதன்போது சாவகச்சேரி நகராட்சி மன்ற தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன், உப தவிசாளர் பாலமயூரன், உறுப்பினர் சுபோதினி, சாவகச்சேரி பிரதேச சபை உப தலைவர் செ.மயூரன், மற்றும் சாவகச்சேரி வணிகர் கழக தலைவர் சிவபாலன், நகர வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here