பிரமுகர்களின் வாகன போக்குவரத்திற்காக வீதிகளை மூடவேண்டாம் – பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி பணிப்பு

பிரமுகர்களின் வாகன போக்குவரத்திற்காக மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையில் எக்காரணம் கொண்டும் வீதிகளை மூடி வைக்கக் கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

“நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், பிரமுகர்களின் வாகன போக்குவரத்திற்காக வீதிகள் மூடப்படுவதனால் மக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அதற்கமைய பிரமுகர்களின் பாதுகாப்புத் துறையினருக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்துமாறும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தாத வண்ணம் பிரமுகர்களின் வாகனங்களை செலுத்துமாறும் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது” என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!