இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

தூங்கும் வான் சாரதிகளின் கைகளில் பயணிகளின் உயிர்

0
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1157

தொடரும் வாகன விபத்து, கொழும்பிற்கு யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மாறி மாறி பயணிக்கும் பயணிகளின் உயிர், தூங்கும் சாரதிகளின் கைகளில். இதில் கூடுதலாக அகப்பட்டோர் புலம்பெயர்ந்த நம் உறவுகள்.

விடுமுறையில் உறவினர்களை பார்க்க வந்து உயிரை இழந்து சென்றவர்களும் கை, கால் முறிந்து சென்றவர்களும் என துன்பங்களில் முடிந்ததாக அமைந்தது அவர்களின் பயணங்கள். 2009 இல் போர் முடிவடைந்த காலப்பகுதியில் இருந்து இன்று பத்து வருடம் ஆகிறது. பல விழிப்புணர்வுகள் செய்தும் இன்று வரை இந்த விபத்துகள் முடிவுக்கு வந்ததாக இல்லை.

இடம்பெற்ற இவாறான விபத்துக்களில் மிகவும் மோசமான முறையில் இழப்புக்களை சந்தித்தவர்கள் முழுமையாக ஹைஏஸ், டொல்பின் ரக வான்களில் பயணித்த பயணிகளே. பொதுவாக, கூடுதலான பயணிகள், யாழ்ப்பாணதிற்கும் கொழும்புக்கு இடையியலான பயணங்களை இரவு வேளையிலேயே செய்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உண்டு அவையாவன  

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156
 • பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்கள் பகல் நேரங்களை சேமிக்கும் நோக்கத்தோடு, இரவு நேரத்தை பயணிப்பதற்காக தெரிவு செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சிலவேளைகளில் இவர்கள் இரவு நேரங்களில் விமான நிலையத்தை வந்தடைவதனாலும் இவ்வாறாக பயணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்குகிறார்கள்.
 • சில வாகன சாரதிகளின் ஆலோசனைக்கு இணங்கியும் இவர்கள் இரவு நேரத்தில் பயணிப்பதற்கு சம்மதிக்கிறார்கள்.
 • அத்துடன் சில சமயங்களில் இவர்களுக்கு திட்டமிட்டு வந்த விடுமுறை நாள்கள் போதுமானதாக இல்லாத காரணத்தினால், கடைசி நாள் வரை உறவினர்களை சந்திப்பதிலும் குடும்ப உறவுகளோடு நேரம் செலவழிப்பதிலும் மிகவும் பிஸியாக இருப்பார்கள்.
 • உறவினர்களின் வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதனாலும் அவர்களின் வசதிக்கு ஏற்ற முறையில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவார்கள். அத்துடன் அவர்களுடைய வாகனத்தை வாடகைக்கு அமர்த்தும் நோக்கத்தோடும் பயணத்தை முடிவு செய்வதனால், பயண நேரங்களை சரியான முறையில் திட்டமிட்டுக்  கொள்வதையும் தவிர்த்து விடுகிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் வாகன சாரதிகளும் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவதை விரும்புகிறாரக்ள். அதற்கான காரணங்கள்.

 • இரவு வேளையில் பாதைகளில் வாகன நெரிசல் இல்லை. அதனால் வாகனத்தை விரைவாக செலுத்த முடியும்.
 • வீதியோரம் நிற்கும் போக்குவரத்து பொலிஸின் கண்காணிப்புகள் குறைவு. இதனால் வேக கடுப்ப்பாட்டை மீறியும் வாகனத்தை செலுத்த முடியும்.
 • வாகன நெரிசல் இல்லாத காரணத்தால் வழமையை விட குறைந்த நேரத்தில் யாழ்பாணத்தையோ அல்லது கொழும்பையோ அடைந்திடலாம் என்ற எண்ணமும்.

எனவே மேற்கூறிய இவாறான காரணங்கள் இரவு நேர பயணத்திற்கு இருந்தாலும். ஏன் விபத்துக்கள் இடம் பெறுகின்றன என்று ஆராய்ந்து பார்கையில், வந்து நிற்கும் காரணங்ள் மிகவும் கவலையளிக்கிறது. அவையாவன..

 • அனுபவம் இல்லாத மிகவும் இளவயது சாரதிகளை வேலைக்கு அமர்த்துதல்
 • போக்குவரத்தின் போது வாகன சாரதிகள் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து ஒழுங்கு விதிகளையும் வீதி நடைமுறைகளையும் பின்பற்ற தவறுதல்
 • உழைக்கும் ஆசையில் ஓய்வின்றி ஏற்றுக்கொள்ளப்படும் ஓட்டங்களால் வாகன சாரதிகள் ஒய்வின்றியும் தூக்கமின்றியும் தொடர்ச்சியாக வாகனத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுதல்.
 • அத்துடன் தொடர்ச்சியான ஓட்டங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தை கருத்தில் கொள்வதனால் வாகன உரிமையாளர்கள் சாரதிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விடுதல்.
 • வாகனத்தை வாடகைக்கு அமர்த்துபவர்களும் சாரதிக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ச்சியாக வாகனத்தை செலுத்த அனுமதித்தல்.
 • வாகனத்தை செலுத்தும் போது தொடர்ச்சியான தொலைபேசி உரையாடலில் கவனத்தை செலுத்துதல். இதனால் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பை உணர்ந்து கொள்ள தவறுதல். இந்த தொலைபேசி உரையாடலில் பெரும்பாலானவை எங்கே பொலிஸ் தரித்து நிற்கிறார்கள் என்ற தகவல்களை பின் தொடரும் மற்றய வாகன சாரதிக்ளுக்கு அறிவிப்பதாகவே காணப்படுகிறது.
 • பயணிக்கும் போது அடிக்கடி வாகனத்தை நிறுத்தி தம்மை திடப்படுத்திக் கொள்ளவும் தவறி விடுதல்.
 • சில சாரதிகள் தங்கள் மீது வைத்திருக்கும் முட்டாள் தனமான நம்பிக்கைகள். அதாவது தாம் அனுபவம் நிறைத்தவர்களாகவும் தமக்கு தூக்கம் ஒருபோதும் வந்ததில்லை விபத்துக்களும் நேர்ந்ததில்லை என தற்பெருமை கொள்ளுதல்.
 • சில நேரங்களில் சாரதிகளுக்கு நித்திரை தூக்கம் இருப்பதை அவதானிக்க முடியும். இதை அவதானித்து நாம் அவர்களை வாகனத்தை நிறுத்தி நித்திரை கொள்ள சொல்லி கேட்டாலும். அவர்கள் அதை நிராகரித்து இன்னும் கொஞ்ச தூரம்தானே என வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ச்சியாக ஓட்டுவது. 
 • வாடைக்கு அமர்த்தப்படும் எந்த ஒரு வாகனத்திலும், அங்கே முன் இருக்கைகளுக்கு மட்டும் சீட் பெல்ட் இருக்கும், பின் இருக்கைகளுக்கு இருப்பதில்லை. இலங்கையை பொறுத்தவரையில் இது ஒரு பெரிய குறையாகவே உள்ளது. ஏனெனில் நீண்ட தூர பயணத்தில் ஈடுபடும் எந்த ஒரு வாகனத்திற்கும் பின் இருக்கைகளுக்கு சீட் பெல்ட் இல்லை என்றே கூறிக் கொள்ள முடியும்.
 • நேரம் தாழ்த்தி இரவு நேரங்களில் பயணிகளை ஏற்றுவது. பொதுவாக இரவு ஒன்பது, பத்து, பதினோரு மணி எனும் நேரங்களில் பயணத்தை தொடங்குவதனால் அதிகாலை இரண்டு, மூன்று, நான்கு மணிவரை வாகனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நித்திரை பெரிதும் தூங்கும் நேரமான அதிகாலை இரண்டு, மூன்று மணிக்கு வாகனத்தை தூக்கத்தோடு செலுத்த வேண்டிய நிலை சார்த்திகளுக்கு ஏற்படுகிறது
 • போக்குவரத்தினிடையே இரவு நேரங்களில் வீதிகளை கடக்கும் யானை போன்ற காட்டு விலங்குகளினால் ஏற்படும் ஆபத்துக்களை கருத்தில் கொள்ளாமல் வாகனத்தை செலுத்துதல்
 • வாகன சாரதிகள், வாகனத்தை வாடகைக்கு அமர்த்தும் பயணிகளின் வேண்டுகோள்களை கவனத்தில் எடுக்காமலும் அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு கீழ் படியாமலும் வாகனத்தை செலுத்துதல்.
 • வாகனத்தை வாடகைக்கு அமர்த்தும் பயணிகள் வாகன சாரதி, தவறான வழிமுறைகளை கையாளுகிறார் என்று தெரிந்த பின்பும், அவரை கட்டுப்படுத்தாமல் அல்லது அவரை கண்டிக்காமல் வாய் மூடிக்கொண்டிருத்தல். இது சாரதியை அவர் நினைத்தபடியே வாகனத்தை செலுத்த அனுமதிப்பதற்கு வழிவகுக்கிறது.
 • பயணிகள் வாகனத்தில் ஏற முன்பு குறித்த வாகனம் எந்த பாதை வழியாக செல்ல இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் வாகனத்தில் ஏறி அமர்ந்து சாரதியின் போக்குக்கு ஏற்றவாறு வாகனத்தை செல்ல அனுமதித்தல்
 • வாகனத்தில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையை விட மேலும் மேலதிகமாக ஆட்களை ஏற்ற அனுமதித்தல்.
 • சிலவேளைகளில் சில போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாரதிகளின் தவறுகளுக்கு தண்ட பணம் அறவிடாமல் அவர்களை நண்பர்கள் இன்றேல் தெரிந்தவர்கள் என நினைத்து அவர்களின் தவறுகளை கண்டுகொள்ளாமல் விடுதல்.

எனவே மேற் கூறிய விடயங்களை நாம் கருத்தில் எடுத்துக்கொண்டால் இந்த விபத்துகளில் இருந்து விலகி இருக்கலாம். அது மட்டுமல்லாமல் இரவு நேர பயணங்களில், பயணிக்கும் நேரங்களை மாற்றி அமைப்பதன் மூலமும் இயன்றளவு இந்த விபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

பொதுவாக இரவு நேர பயணங்களுக்கு முயற்சிப்பவர்கள் பிற்பகல் மூன்று அல்லது நான்கு மணிக்கு தங்கள் பயணங்களை தொடங்கினால் பின்னிரவில் பிரயாணிப்பதை தவிர்த்து நள்ளிரவிற்குள் நமது இடத்தை அடைந்து விடலாம்.

அதுமட்டுமல்லாமல் இன்னொரு வழிமுறையாக, அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு பயணத்தை தொடங்கினால், நண்பகலுக்கு முதல் எமது பயணத்தை முடித்துக்கொள்ளலாம். இதன் மூலம் நித்திரை தூங்கும் நேரத்தை தவிர்க்கவும் முடியும் அதனால் எழும் விபத்துக்களுக்கு ஒரு முடிவை காணவும் முடியும்.

ஆகவே இந்த முடிவுகள் பயணிப்போரின் கைகளிலும் வான் சாரதிகளின் கைகளிலுமே இருக்கிறது. அத்துடன் ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பில் அக்கறை வைத்துக்கொள்வார்களே ஆனால் இந்த ஆபாத்தான பிரயாணங்களை இலகுவாக்கி நம்மை நாமே பாதுகாத்துகொள்வதன் மூலம் இந்த விபத்துக்களுக்கு ஒரு தீர்வையும் கண்டுவிடலாம்

பகீரதன் கணபதிப்பிள்ளை

வடமராட்சி 

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here