சாவகச்சேரியில் மாட்டுவண்டிச் சவாரி

0

சாவகச்சேரி மட்டுவில் பிரதேச சவாரி திடலில் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை மதியம் சவாரி போட்டி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இரமாநாதன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

யாழ் மாவட்ட சாவாரி மன்றம் பதிவு செய்து விவசாயிகளின் பாரம்பரியமிக்க மாட்டு வண்டி சவாரிக்கு புத்துயிர் அளித்தமைக்காக நேற்று இடம்பெற்றிருந்த சவாரி போட்டி நிகழ்வின் போது விவசாயிகள் மற்றும் சவாரி சங்கத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கௌரவிப்பு செய்திருந்தனர்.

கிளிநொச்சி, பூநகரி வட்டுகோட்டை, அளவெட்டி, சாவகச்சேரி, கீரிமலை, சங்குவேலி, போன்ற பிரதேசங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


வெற்றி பெற்றவர்களுக்கு தங்கபதக்கமும் பெறுமதியான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் சிவராம், யாழ் மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ,மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் கிங்ஸ்லி, காங்கேசன்துறை அமைப்பாளர் ஞானசீலன், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான குகானந்தன் , விஜயரூபன் பத்மா, வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரதீபன்,மாட்டு வண்டி சவாரி சங்க தலைவர் கனகரத்தினம், முன்னாள் உபதலைவர் மூர்த்தி (பவளம்)மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோர் இணைந்திருந்தனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்