மூத்த ஊடகவியலாளர் நடேசனின் 15ஆவது நினைவேந்தல்

0

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

மூத்த ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன், 2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

nadeshan-1

Image 1 of 8